வீட்டு மொட்டை மாடியில் கொடூரமாக சொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி : அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan14 செப்டம்பர் 2024, 11:30 காலை
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள பனையக்குறிச்சி,மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மகன் சுந்தர் என்கிற காக்கா என்கிற
சுந்தர்ராஜ்(32).
பிரபல ரவுடி ஆன இவன் மீது திருவரம்பூர், அரியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
கழுத்தை வெட்டி கொலை செய்யும் எக்ஸ்பர்ட் ஆன இவன் கழுத்து வெட்டி காக்கா சுந்தர் என அடைமொழியுடன் வலம் வந்தான்.
ரவுடி தனம் செய்து வந்த சுந்தர்ராஜ் அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டு மாடியின் மேலுள்ள மொட்டை மாடியில் உறங்க சென்றார் சுந்தர்ராஜ். இன்று காலை நீண்ட நேரமாகியும் சுந்தர்ராஜ் கீழே வராததால் அவரது குடும்பத்தினர் மேலே சென்று பார்த்த பொழுது கழுத்து வெட்டுப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தை கண்டு அதிர்ச்சடைந்தனர்.
இது குறித்து குடும்பத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், திருவரம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஜாஃபர்சித்திக் மற்றும் காவல்துறையின சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும்,மோப்பநாய் லீலி சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது . தடயவியல் நிபுணர் கலைவாணி சம்பவ இடத்தில் தடையங்களை சேகரித்தார்.
கொலை செய்யப்பட்ட சுந்தர்ராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது
மகன்கள் மதி, வடிவேல் ஆகியோருடன் சுந்தர்ராஜ் அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்த நிலையில் அவர்களுக்கிடையே கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: WEEK ENDல் கூட மனசு இறங்காத தங்கம்.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!
தகராறு முற்றியதில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் எஸ்.பி. வருண்குமார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த
போது மற்றொரு பகுதியில் சுந்தர்ராஜ் ஓட்டி வந்த மகேந்திரா வேனை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து நொறுக்கி தப்பி ஓடினர். இது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0