“நீ வரும் போது நான் மறைவேனா“ : கொட்டு மழையில் நனைந்தபடி எஞ்ஜாய் செய்த யானைக் கூட்டம்!!

13 July 2021, 10:10 am
elephant Njoy - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் பகுதியில் மழைச்சாரலில் ஹாயாக நடமாடும் யானை கூட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள், மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு காட்டு மிருகங்கள் வாழ்கின்றன. கடந்த நான்கு நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஆசனூர் வனப்பகுதியில் விட்டு விட்டு இதமான சாரல் மழை பெய்து கொண்டிருக்கின்றது.

இதனால் செடி கொடிகள் பச்சை பசேலென பசுமையாக காட்சி அளிக்கின்றது. இதனிடையே நேற்று மாலை சுமார் 4.00 மணி அளவில் ஆசனூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் யானை கூட்டம் ஒன்று மலைச்சாரலில் நடந்து வந்தது.

இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் தூரமாக நின்று படம் எடுக்க ஆரம்பித்தனர். பின்னர் யானை கூட்டம் மெதுவாக நடந்து சாலையை கடந்து மீண்டும் காட்டுப்பகுதிக்குள் சென்றது. இதனை பார்த்த பொதுமக்கள் மிகவும் பரவசமடைந்தனர். எனினும் காட்டு மிருகங்கள் ஆபத்தானவையே. அவற்றை தூரத்திலிருந்து பார்த்து ரசிக்கும்படி வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 167

1

0