பரபரப்பான சாலையில் ஒற்றை காட்டு யானை அட்டகாசம் : பொதுமக்களை ஓட ஓட விரட்டிய திக் திக் வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2023, 9:57 am
Elephant - Updatenews360
Quick Share

கோவை மாவட்டம் கணுவாய் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை யானை.

கோவை மாவட்டம் பெரியதடாகம் வனப்பகுதியில் தற்போது 15 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு மருதமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை வடவள்ளி கணுவாய் சாலையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

பின்னர் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்து விட்டு அருகில் உள்ள வாழை தோட்டத்திற்குள் சென்றது.

இது குறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே குடியிருப்பு பகுதிக்குள் வந்து தண்ணீர் குடிக்கும் யானையை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை கணுவாய் மெயின் ரோட்டில் ஒற்றைக் காட்டு யானை சாலையில் வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து சிதறி ஓடினர்.

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது யானை சாலையில் சுற்றி திரியும் அந்த காட்சிகள் பரவி வருகிறது.

Views: - 525

0

0