சட்டென வீசிய சூறை காற்று… கனமழையால் இடிந்து விழுந்த பனியன் கம்பெனி : அலறி ஓடிய ஊழியர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 August 2023, 8:21 pm
BAniyan Conpany - Updatenews360
Quick Share

திருப்பூர் கூலி பாளையம் பகுதியில் கிஷோர் கார்மென்ஸ் என்ற பனியன் நிறுவனத்தில் 3 ஆயிரம் சதுர அடியில் தகரக் கொட்டகை அமைத்து பனியன் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

திடீரென்று இன்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது சூறை காற்றுடன் வீசிய கனமழையின் காரணமாக தகரக் கொட்டகை முற்றிலுமாக சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவரும் தேநீர் இடைவேளைக்கு வெளியே சென்றதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் அவசர உறுதியினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு சரிந்து விழுந்த கூரையின் கீழ் யாரேனும் இடிபாடுகளில் சிக்கி உள்ளனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

சூறைக்காற்றுடன் வீசிய கன மழையில் பின்னலாடை நிறுவனம் முற்றிலும் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து ஊத்துக்குளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஓணம் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் விடுமுறை அளித்த நேரத்தில் தொழிலாளர்களை வைத்து வேலை செய்து வந்த இந்நிறுவனத்தில் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்தும் தீயணைப்புத் துறையினரும் காவலதுறையினரும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 261

0

0