உடல் பருமனுக்காக சர்ஜரி செய்த இளைஞர்.. 15 நிமிடத்தில் பறிபோன உயிர் : பின்னணியில் பகீர்!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2024, 8:59 pm
FAT
Quick Share

உடல் பருமனுக்காக சர்ஜரி செய்த இளைஞர்.. 15 நிமிடத்தில் பறிபோன உயிர் : பின்னணியில் பகீர்!

புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன் என்பவர் மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என இரட்டை ஆண் பிள்ளைகள் (26 வயது) உள்ளனர்.

இந்த இரண்டு பேரில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து விட்டு டிசைனராக வேலை செய்து வந்தார். ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் முடித்துவிட்டு பணியாற்றி வருகிறார்.

இதில் ஹேமசந்திரன் உடல் பருமன் அதிகம் உள்ளவர். இவர் தனது உடல் பருமனை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று விரும்பினார்.

இதற்காக பல்வேறு இடங்களை தேடி வந்தவர், சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தாராம். இந்த நிலையில் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் வழக்கு : அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு.. ‘க்ளீன் சீட்’ கொடுத்த போலீஸ்!!

ஆனால் அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக மருத்துவர்கள் தெரிவத்தனர்.

இதையடுத்து கதறி அழுததுடன், அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் சென்னை பம்மல் காவல் நிலையத்தில் மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மிக அதிகமான உடல் பருமன் உள்ளவர்களுக்கு பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை (bariatric surgery) மூலம் உடல் பருமனைக் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதே போல் என்டோபேரியாட்ரிக் (endobariatric) சிகிச்சைகளும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

என்ன சிகிச்சை என்றால், வாய்வழியே ஒரு குழாய் செலுத்தி வயிற்றில் ஒரு பலூன் வைப்பார்கள். அது வயிற்றின் ஒரு பகுதியை இது நிரப்பிக்கொள்ளும், அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்ள முடியாது. இதன்மூலம் உடல் எடை கட்டுக்குள் வந்ததும் பலூன் அகற்றப்படும்,” என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Views: - 146

0

0