28 ஆண்டு கால சினிமா பயணம்.! நடிகர் அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.!!

3 August 2020, 4:56 pm
Madurai Ajith Poster - Updatenews360
Quick Share

மதுரை : “மேடை ஏறி அரசியல் பேசுபவர்கள் பல; மேடையே ஏறாமல் அந்த அரசியலே பேசும்! – அதான் எங்க தல” – என மதுரையில் அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர்களில் நடிகர் அஜித்தும் ஒருவர். அவருக்கு பல்லாயிர ரசிகர்கள் உள்ளனர். அஜித் திரையுலகத்திற்கு வந்து 28 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.

இந்த நிலையில் ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மேடையில் பேசுகையில் அரசியலுக்கு வருவார்களா மாட்டார்களா?என பல்வேறு தரப்பினரிடையே விவாதப் பொருளாக இருந்து வரும் நிலையில் நடிகர் அஜித் அவர்களே முன்னுதாரணமாக வைத்து பல அரசியல் தலைவர்களுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித் அவர்களின் 28 ஆண்டுகள் சினிமா பயணம் குறித்து அதனை நினைவுகூறும் வகையில் அவரது ரசிகர்கள் மதுரை மாநகர் முழுவதும் ’28 years of Ajithism’ என்ற போஸ்டரை ஒட்டியுள்ளனர். மேலும் “மேடை ஏறி அரசியல் பேசுபவர்கள் பல; மேடையே ஏறாமல் அந்த அரசியலே பேசும்! – அதான் எங்க தல” என்ற வாசம் அடங்கிய போஸ்டர்களை நடிகர் அஜித்தின் 28 ஆண்டுகால திரையுலக பயணம் குறித்து மதுரையில் அவருடைய ரசிகர்கள் ஒட்டிய சுவாரசிய போஸ்டர்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Views: - 11

0

0