Soori-யின் 6 Packs பார்த்து அசந்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள். .!
Author: Mari28 May 2022, 6:09 pm
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் சூரி. சின்ன சின்ன வேடங்களில் நடத்து வந்த சூரி தற்போது மிகப் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார்.
பொதுவாக வெள்ளையாக இருப்பவர்களுக்குத்தான் சிக்ஸ் பேக் நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள். அதுவும் கதாநாயகன் மட்டுமே சிக்ஸ் பேக் வைத்திருப்பார்.
ஆனால் ஒரு கிராமத்தில் பிறந்து தனது நடிப்பாற்றலால் திரையுலகை சூரி கலக்கி வருகிறார். தற்போது வெள்ளையா இருக்கிறவங்களுக்குத்தான் சிக்ஸ் பேக் நல்லாயிருக்கும் என்ற வரைமுறையை உடைந்தெறிந்துள்ளார் சூரி. இந்த நிலையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிக்ஸ் பேக் காட்டிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
12
1