நடிகர் விஜய் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த இடைக்காலத் தடை : தனி நீதிபதியின் கருத்து குறித்து பின்னர் விசாரணை!!!

Author: Udayachandran
27 July 2021, 12:54 pm
Vijay Fine-Updatenews360
Quick Share

சென்னை : நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2012ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு, நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்த போது, மனுவை தள்ளுபடி செய்து விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தனி நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

மேலும் அபராத தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கும்படியும், வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு, நன்கொடை அல்ல, நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும், ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என காட்டமான கருத்தை வெளியிட்டார்.

இந்நிலையில், தனி நீதிபதி விதித்த தீர்ப்பை எதிர்த்தும், தான் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தவேண்டும் என்கிற உத்தரவை எதிர்க்கவில்லை, அதை மதிக்கிறோம். ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரி செலுத்த தயாராக இருக்கிறோம் என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Views: - 122

0

0