வீதி வீதியாக நடிகர் விவேக்கிற்கு மரியாதை செலுத்தும் மக்கள் : கலப்பை மக்கள் இயக்கம் மலர் தூவி அஞ்சலி..!

17 April 2021, 2:10 pm
vivek respect - updatenews360
Quick Share

நடிகர் விவேக்கின் மறைவிற்கு தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் வீதி வீதியாக புகைப்படம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். இதனையடுத்து, அவரது பூத உடலுக்கு திரைத்துறையினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள், ரசிகர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், குமரி மாவட்டம் கொட்டாரம் சந்திப்பில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விவேக் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கலப்பை மக்கள் இயக்கத் தலைவரும், மக்கள் நீதி மையம் கட்சியின் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான பி.டி. செல்வகுமார் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார்.

அஞ்சலி நிகழ்ச்சியில் மக்கள் நீதி மையம் கட்சி மாவட்ட தலைவர் சசி,கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 36

0

0