ஸ்டாலின் பிரதமரானால் தான் அது நடக்கும்.. திமுகவுக்கு ஓட்டு கேட்ட சபாநாயகர் ; மரபை மீறியதாக அதிமுக குற்றச்சாட்டு..!!!

Author: Babu Lakshmanan
21 September 2023, 2:32 pm
Quick Share

பொதுமக்களிடையே திமுகவுக்கு ஆதரவாக சபாநாயகர் வாக்கு சேகரிப்பது சட்டமன்ற விதிகளுக்கு எதிரான என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக இருப்பவர் அப்பாவு. ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியின் எம்எல்ஏவாகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களாக ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், அண்மையில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்த பெண்களை சந்தித்து பேசினார். அப்போது, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என்றால், ஸ்டாலின் பிரதமரானால் நிச்சயம் இது நடக்கும் என்று கூறினார். மேலும், நீங்கள் கட்டாயம் திமுகவுக்கு வாக்களிப்பீர்கள் என தெரியும். வழக்கம் போல செய்வதை நீங்கள் செய்தாலே போதும் என்றும் கூறியிருந்தார்.

அவரது இந்தப் பேச்சுக்கள் அடங்கிய வீடியோவை பகிர்ந்த அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, “நூறு நாள் வேலை திட்டத்துக்கு மத்திய அரசு பணம் தரவில்லை! எனவே ஸ்டாலின் பிரதமராக வர ஓட்டு போடுங்க,” மரபை மீறி திமுகவுக்கு ஓட்டு கேட்ட சபாநாயகர் அப்பாவு! சட்ட பேரவையில் இவர் எப்படி நடுநிலையாக செயல்படுவார்? நடுநிலை தவறிய அப்பாவு எப்படி சபாநாயகராக தொடர முடியும்?, எனக் கேள்வி எழுப்பினார்.

Views: - 111

0

0