இனி அதிமுக என்றால் எடப்பாடியார் மட்டுமே… கையெழுத்து கூட போட முடியாது : பொள்ளாச்சி ஜெயராமன் பரபர பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2023, 4:30 pm
Pollachi Jayaraman - Updatenews360
Quick Share

திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் அதிமுக திருப்பூர் மாவட்டம் மகளிரணி தலைவி சுந்தராம்பாள் கேசவன் ஏற்பாட்டில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா ராயபுரத்தில் நடைபெற்றது.

இந்த விழாவை பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி.வி. ஜெயராமன் அவர்கள் ரிப்பன் வெட்டி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு தர்பூசணி, மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இதையடுத்து பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுமக்களுக்கு நீர் மோர், தண்ணீர், பழங்கள் உள்ளிட்டவைகள் பொதுமக்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி முதல் முறையாக திருப்பூரில் ராயபுரம் பகுதியில் இன்று நீர் மோர் பந்தல் துவங்கப்பட்டது. நிர்வாகிகள் அனைவரும் அனைத்து பகுதிகளிலும் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்து பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.

மேலும் சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு வழங்குவதை கருத்தில் கொள்ள வேண்டும், கருணாநிதியின் பக்தன் என்று சொன்னவர்களுக்கு எல்லாம் காலம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

மறைந்த முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் ஆத்மா அவர்களை சும்மா விடாது, இனி அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்கள் மட்டும்தான், மேலும் கட்சிக்கொடியை இனி யாரும் பயன்படுத்த முடியாது,
கையெழுத்திடவும் முடியாது. இனி வரும் காலம் எம்.ஜி.ஆர் வழியில் அம்மா வழியில் எடப்பாடியார் மீண்டும் முதல்வராகி தமிழக மக்களுக்கு சிறப்பான ஆட்சி வழங்குவார் என்று முன்னாள் துணை சபாநாயகர் பேசினார்.

அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களுக்கு அங்கீகாரம் அளித்ததற்கு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

இந்த நிகழ்வில் அதிமுக திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், பழனிச்சாமி உட்பட அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Views: - 276

0

0