வடமாநில வணிகர்கள் குறித்து அண்ணாமலை தவறான கருத்தை கூறி திசைத் திருப்புகிறார் : அமைச்சர் மூர்த்தி குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2022, 11:58 am
Minister Moorthy - Updatenews360
Quick Share

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை சார்பில் இந்தாண்டு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தஞ்சையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

திருச்சி கோட்டம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக்கல்வித்துறை துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்க்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் பி.மூர்த்தி, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற மொத்த வருவாயில் 87 சதவீதம் வருவாய் ஈட்டக்கூடிய வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை மூலம் இந்தாண்டு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் வணிகவரித்துறை மூலம் 17 ஆயிரம் கோடி ரூபாயும், பதிவுத்துறை மூலம் 3000 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டப் பட்டுள்ள நிலையில் இந்தாண்டு இலக்கை நிச்சயம் எட்டுவோம் என்றவர், பெரும்பாலான வணிகர்கள் முறையாக ஜிஎஸ்டி வரியை கட்டும் நிலையில் , ஒருசில (வடமாநில) வணிகர்கள் போலியாக பில் தயாரித்து ஏமாற்றுவதால் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்த நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை திசை திருப்பும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை வடமாநில வணிகர்களை திரும்பி போகசொன்னதாக கூறி திசை திருப்புகிறார் என குற்றம்சாட்டினார்.

கடந்த ஆட்சி காலத்தில் இத்துறையில் பள்ளிகரணை சதுப்பு நிலம் முறைகேடு உள்ளிட்ட பல ஆயிரம் கோடி அளவுக்கு பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடைபெற்றுள்ள நிலையில், அதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு துறையிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Views: - 553

0

0