கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு போறீங்களா? மறக்காம QR CODE ஸ்கேன் பண்ணுங்க… சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2023, 9:41 pm
Kodai - Updatenews360
Quick Share

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு இடங்கள் இருந்து வருகிறது. தொடர்ந்து கொடைக்கானலில் பிரையண்ட் கவருவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது . இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு வகையிலான பல லட்சம் மலர்கள் பூத்துக் குலுங்கும் .

தற்போது மே மாத சீசன் ஆரம்பித்து உள்ள நிலையில் மலர் கண்காட்சிக்காக பேன்சி , டெல்பினியம், மேரி கோல்ட் , கேலண்டுல்லா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டு தற்போது பூத்துக் குலுங்கும் நிலையில் இருந்து வருகிறது . இதில் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மலர்களின் பெயர்களை கண்டறிய க்யூ ஆர் கோடு அந்தந்த மலர்களின் பெயர் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது.

இதனை சுற்றுலாப் பயணிகள் தங்களது கைபேசிகளில் ஸ்கேன் செய்வதன் மூலமாக பூக்களின் விபரங்கள் மற்றும் அதன் குடும்ப வகைகள் எந்த சமயங்களில் பூக்கும் என்ற முழு விவரமும் பார்த்துக் கொள்ளலாம் என தயார் செய்யப்பட்டுள்ளது .

இதன் மூலம் சுற்றுலா பயணிகள் எளிதாக பூக்களின் பெயர்களை கண்டறியலாம் எனவும் இது சுற்றுலா பயணிகளை கவரும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Views: - 298

0

0