மனைவிடம் தகராறு செய்த தம்பி…. அடித்துக்கொன்ற அண்ணன்… கோபத்தால் பறிபோன உயிர்…!!

Author: Babu Lakshmanan
13 April 2022, 12:11 pm
Quick Share

அரியலூர் அருகே மனைவியிடம் தகராறு செய்த தம்பியை அடித்து கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருக்கு திருமணமாகி ரதிஅழகி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் சமயபுரத்தில் உள்ள அலுமினிய கம்பெனியில் வேலை செய்து வருகிறார். முருகானந்தத்திற்கு ரமேஷ் என்ற தம்பி உள்ளார். சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். தனது அண்ணனுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் முருகானந்தம் வேலைக்குச் சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த தனது அண்ணி ரவி அழகியிடம் தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கும்படி தகராறு செய்துள்ளார். மேலும் தன்னையும் குழந்தைகளையும் ரமேஷ் அடித்து துன்புறுத்துவதாக, தனது கணவர் முருகானந்தத்திற்கு ரதி அழகி போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

வீட்டிற்கு வந்த முருகானந்தத்திற்கும் ரமேஷ் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முருகானந்தம் வாசலில் இருந்த உலக்கையால் ரமேஷை தாக்கியதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து முருகானந்தத்தின் சகோதரி முத்தமிழ் செல்வி கீழப்பலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முருகானந்தத்தை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பூண்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Views: - 693

0

0