‘கோடி அருவி கொட்டுதே அடி என் மேல’…. ஆர்ப்பரித்து கொட்டும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி… வனத்துறை பிறப்பித்த புது உத்தரவு!!

Author: Babu Lakshmanan
11 July 2023, 12:48 pm
Quick Share

கோவை ; வால்பாறையை அடுத்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை அடுத்த கேரள எல்லையளான அதிரப்பள்ளி பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் நேற்றும், இன்றும் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நீர்வீழ்ச்சியானது தமிழ் திரைப்படத்தில் புன்னகை மன்னன் என்ற படத்தின் மூலமாக இந்த நீர்வீழ்ச்சி தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள மக்களுக்கு அறிமுகமான நீர்வீழ்ச்சியாகும்.

இந்தப் பகுதியில் வால்பாறை சோலையார் அணையில் இருந்து திறந்து விடப்படுகின்ற தண்ணீர் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைகளில் பெருக்கெடுத்து வரும் ஆற்றுத் தண்ணீர் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அடைகிறது.

இதனால் அப்பகுதியில் அதிக அளவில் கரைபுரண்டு ஓடும் வெள்ள பகுதியை சுற்றிப் பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 231

0

0