முன்விரோதத்தால் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி: காப்பாற்ற வந்தவரும் பலியான சோகம்…திருவண்ணாமலையில் ஷாக்..!!

Author: Rajesh
9 March 2022, 10:41 am

திருவண்ணாமலை: கலசபாக்கம் அருகே முன்விரோதம் காரணமாக மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள சொரகொளத்தூர் கிராமத்தில் வசிப்பவர் சரண்ராஜ். இவர் மீதான முன்விரோதத்தால் ஏழுமலை என்பவர் இவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி, இரவில் மாட்டுக்கொட்டகையில் உறங்கி கொண்டிருந்த சரண்ராஜ் மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதன்படி, சரண்ராஜ் மீது ஏழுமலை மின்சாரத்தை பாய்ச்சி கொல்ல முயன்ற போது,அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அவரை காப்பாற்ற வந்த ரேணுகோபால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதில், ஏழுமலை, ரேணுகோபால் இருவரும் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!