பணத்த வாரி கொட்டி தேர்தல்ல ஜெயிச்சிருக்கேன்.. எனக்கும் மாமூல் கொடுங்க : மணல் கொள்ளையரிடம் பேரம் பேசும் கவுன்சிலரின் ஆடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2022, 4:01 pm
councilor Audio - Updatenews360
Quick Share

எனக்கும் மாமுல் கொடுங்க மணல் கொள்ளையர்களிடம் ஒன்றிய கவுன்சிலர் பேரம் பேசிய ஆடியோ வைரலான நிலையல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மீனூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் ஒரு அரசியல் கட்சியில் இருந்த இவருக்கு அக்கட்சியில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட சீட் தரவில்லையாம். இதனால் கட்சியில் இருந்து விலகிய அவர் சுயேட்சையாக போட்டியிட்டு ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றார்.

இந்நிலையில் அக்ராவரம், மீனூர் மலை, தட்டப்பாறை, பெரும்பாடி ஆகிய பகுதிகளில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இது தொடர்பாக மணல் கொள்ளையர்களுடன் ஒன்றிய கவுன்சிலர் சரவணன் மாமுல் கேட்பது போன்ற ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் ஒவ்வொரு முறை மணல் கடத்தும் போது போலீசாருக்கு மட்டும் மாமுலை வாரி தருகிறீர்கள். ஆனால் நாங்கள் பல லட்சம் செலவு செய்து தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளோம். எங்களை கண்டு கொள்வதே இல்லை.

இங்கு நடக்கும் மணல் கொள்ளை தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் என்னைத்தான் தொடர்பு கொண்டு கேட்கிறார்கள். எனவே மாமுலில் எனக்கும் பங்கு கொடுங்கள் என பேசி உள்ளார்.

இந்த ஆடியோ தற்போது குடியாத்தம் பகுதியில் பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அறிந்த குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி ஆடியோவில் பேசுவது ஒன்றிய கவுன்சிலர் சரவணனா? அல்லது அவரைப் போல் வேறு யாராவது பேசியுள்ளார்களா? இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறார்.

மேலும் இதுகுறித்து மணல் கொள்ளையர் சின்னத்தம்பி என்பவரிடம் குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணல் கொள்ளையரிடம் மாமூல் கேட்டு கொள்ளைக்கு துணை போகும் வகையில் பேசிய கவுன்சிலரின் ஆடியோ ஓட்டு போட்ட மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 827

0

0