சவால் விட்ட அண்ணாமலை…. தபால்நிலையத்தில் குவிந்த பாஜகவினர்… அப்செட்டில் அமைச்சர் உதயநிதியின் ஆதரவாளர்கள்…!!

Author: Babu Lakshmanan
28 August 2023, 5:13 pm
Quick Share

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு IAS, IPS, TNPSC தேர்வுக்கான பயிற்சி புத்தகங்களை பாஜகவினர் அனுப்பிவைத்தனர்.

தமிழக ஆளுநர் அரசியலில் நின்று வெற்றி பெறட்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விட்டிருந்தார்.

அதாவது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் IAS, IPS, TNPSC தேர்வு எழுதி வெற்றி பெற முடியுமா..? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பத்திரிக்கையாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு அவர் பதிலளிக்காமல் சென்று விட்டார்.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு IAS, IPS, TNPSC தேர்வு எழுதுவதற்கான பயிற்சி புத்தகங்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இருக்கக்கூடிய காந்திநகர் தபால் நிலையத்திலிருந்து, அண்ணா அறிவாலயத்திற்கு பாஜக நிர்வாகிகள் தபால் மூலமாக அனுப்பி வைத்தனர்.

Views: - 228

0

0