சைலண்டாக மலையை குடைந்து மண் திருட்டு… வீடியோவை வெளியிட்ட கோவை மாவட்ட பாஜக நிர்வாகி பரபரப்பு புகார்…!!

Author: Babu Lakshmanan
12 January 2024, 11:09 am
Quick Share

கோவை மைல்கல் அருகே உள்ள வனப்பகுதிக்கு சொந்தமான பகுதியில் சட்டவிரோதமாக மண் எடுப்பதாக பாஜக கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தன் வீடியோ வெளியிட்டு புகார் அளித்துள்ளார்.

அந்த வீடியோவில், அவர் கூறியிருப்பதாவது :- கோவையில் இருந்து ஊட்டி, மேட்டுப்பாளையம் செல்வதற்காக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக, கிராவல் மண் தேவை அதிகமாக உள்ளது. இவங்களே கிராவல் மண் ஒருலோடுக்கு ரூ.500 அல்லது ரூ.600 கமிஷன் வைத்து விற்பதால் கிராவல் மண் விலை அதிகமாக உள்ளது.

அரசாங்க புறம்போக்கு இடத்தில் மண்ணை எடுத்துக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி கொடுத்ததா சொல்றாங்க. ஆனால், 1 மீட்டருக்கு அதிகமாக எந்த அதிகாரியும் அனுமதி தர மாட்டங்க. ஆனால், இங்கு 20 முதல் 30 அடி வரை மண் எடுத்திருக்காங்க.

ஆனால், இங்கு மலையை குடைந்து வனப்பகுதிக்குள் மண்ணை எடுத்து வருகின்றனர். ஒரு விவசாயி வனப்பகுதியில் ஒரு சட்டி மண் எடுத்தாலே சிறையில் போட்டுருவாங்க. இது யானை வழிப்பாதை. இங்கு இதுபோன்று மண் எடுத்தால், மனித – விலங்குகள் மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஒருவேளை மண் எடுக்க அரசு அனுமதி கொடுத்தால், சட்டவிதிகளை பின்பற்றி மண் எடுக்க வேண்டும். மீறி மண் எடுக்கப்பட்டு உறுதியானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறினார்.

Views: - 271

0

0