மீண்டும் வேலையை காட்டும் தங்கம்… வார இறுதியில் அதிரடியாக உயர்வு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
12 January 2024, 11:26 am
Quick Share

மீண்டும் வேலையை காட்டும் தங்கம்… வார இறுதியில் அதிரடியாக உயர்வு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. ஆனால், 2024ம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை சரிந்து வருவது ஆபரண பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,820க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.46,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.4,767க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.38,136க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.77.50க்கும் ஒரு கிலோ ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

.

Views: - 3891

0

0