திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்களின் சொத்து மதிப்புதான் உயரும்… மக்களுக்கு எந்த பயனும் இல்ல ; அண்ணாமலை

Author: Babu Lakshmanan
29 March 2024, 2:14 pm
Quick Share

திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்களின் சொத்து மதிப்புதான் உயரும்… மக்களுக்கு எந்த பயனும் இல்ல ; அண்ணாமலை

திமுக கவுன்சிலர் தேர்தல் போல் பிரச்சாரம் செய்வதாகவும், அதிமுக மாநில தேர்தல் போல் பிரச்சாரம் செய்வதாகவும் கூறிய அண்ணாமலை, மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என இரு கட்சிகளும் பிரச்சாரம் செய்யவில்லை என விமர்சித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து சைக்கிள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறக் கோரி இன்று ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே மணிகுண்டு பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார்.

திறந்தவெளி வாகனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, பொதுமக்களிடம் மத்திய அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதன் பின் பேசிய அண்ணாமலை கூறியதாவது :- திமுக செய்த சாதனையே ₹3.50 லட்சம் கோடி கடன் வாங்கியது தான், நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம் தான். திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் செய்வோம் என்று கூறி ஏமாற்றி வருபவர்கள் தான் திமுக. பொய் பேசுவர்களுக்கு சிறந்த பரிசு கொடுக்கவேண்டும் என்றால், அது முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தான் கொடுக்க வேண்டும்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை 20% கூட நிறைவேற்றவில்லை. ஆனால் 99% வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக மக்களிடம் பொய் கூறுகிறார்கள். திமுக கவுன்சிலர் தேர்தல் போல் பிரச்சாரம் செய்கிறது. அதிமுக மாநில தேர்தல் போல் பிரச்சாரம் செய்கிறார்கள். மத்தியில் யாரும் ஆட்சிக்கு வரவேண்டும் என இரு கட்சிகளும் பிரச்சாரம் செய்யவில்லை.

திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு மனைவியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 350% சொத்து உயர்ந்துள்ளது, இது தான் திமுக வெற்றி பெற்றால், அவர்களின் சொத்து மதிப்பு தான் உயருமே தவிர, மக்களின் வாழ்வாதாரம் உயராது, என தெரிவித்தார்.

Views: - 122

0

0