சினிமா வசனங்களைப் பேசி ஊரை ஏமாற்ற வேண்டாம்… உங்களை சுற்றி என்ன நடக்குது-னு கண்ணை திறந்து பாருங்க ; அண்ணாமலை பாய்ச்சல்!!

Author: Babu Lakshmanan
7 July 2023, 5:30 pm
Annamalai Vs Stalin - Updatenews360
Quick Share

காலாவதியாகிப் போன சினிமா வசனங்களைப் பேசி இன்னும் ஊரை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறாரா முதலமைச்சர் ஸ்டாலின் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலை புரம் பசுமை வழிச்சாலை ரயில் நிலையம் அருகில் உள்ள கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 34 ஜோடிகளுக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், மங்கள நாண் வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து, புதுமணத் தம்பதிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

திருமணத்தை நடத்தி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் மேடையில் பேசுகையில், “கோவில் கூடாது என்பதல்ல, கொடியவர்களின் கூடாரமாக மாறி விடக் கூடாது என்று பராசக்தி திரைப்படத்தில் கருணாநிதி வசனம் எழுதியிருந்தார். அதே உணர்வோடுதான் கோவில்களில் எந்த தவறும் நடந்து விடக் கூடாது என்பதில் கருணாநிதியின் வழியில் திராவிட மாடல் அரசும் பின்தொடர்ந்து வருகிறது,” என்று சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்து பேசினார்.

இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், “கள்ளச் சாராய மரணங்கள், கட்டுப்பாடற்ற கஞ்சா விற்பனை, நீதிமன்றங்களைக் கூட விட்டு வைக்காமல் தினம் ஒரு கொலை, பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை என சட்ட ஒழுங்கு தினசரி சந்தி சிரிக்கிறது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று தினம் ஒரு ஊழல் கதை வெளிவருகிறது.

https://twitter.com/annamalai_k/status/1677241952906121219

காலாவதியாகிப் போன சினிமா வசனங்களைப் பேசி இன்னும் ஊரை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறாரா முதலமைச்சர்? தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் தவறுகளை முதலில் கண் விழித்துப் பார்க்கட்டும்,” எனக் கூறினார்.

Views: - 224

0

0