தமிழகத்தில் கல்வி காவி மயமாகவில்லை.. கலைஞர் மயமாகியுள்ளது : தமிழிசை குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2024, 4:59 pm
tamilisai
Quick Share

தமிழகத்தில் கல்வி காவி மயமாகவில்லை.. கலைஞர் மயமாகியுள்ளது : தமிழிசை குற்றச்சாட்டு!!

வேலூர், காட்பாடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், நாடு வளர்ச்சியடைந்த பாதையில் போக வேண்டுமென்றால், மோடி மறுபடியும் பிரதமராக வர வேண்டும்.

எதிர்க்கட்சிகள் சுயநலத்துக்காக ஓட்டு கேட்கின்றன. பிரதமர் மட்டுமே பொதுநலனுக்காக ஓட்டு கேட்கிறார்.
தி.மு.க-வில்தான் சாதிக் இருந்தார். திரைத் துறையினருக்கும், தி.மு.க-வைச் சேர்ந்தவர்களுக்கும் கஞ்சா பரவுவதில் அதிக பங்குகளும் இருக்கிறது.

கஞ்சா கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும். இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், கல்வியில் சிறிய மாற்றம் கொண்டுவந்தவுடன் காவி மயமாகிவிட்டது என்றார்கள்.

மேலும் படிக்க: குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்.. மாயமான சிறுவன் : அலறி ஓடிய மக்கள்.. ஷாக் வீடியோ!

உண்மையில் கல்வி காவி மயமாகவில்லை. கலைஞர் மயமாகியுள்ளது.8-ம் வகுப்பில் கலைஞரை படிக்க ஆரம்பித்து, 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பிலும் கலைஞரைப் படிக்க வேண்டுமா?.

ஒருத் தலைவரை பற்றி எத்தனை பாடப்புத்தகங்களில் வைப்பீர்கள். அறியப்படாத எத்தனையோ தலைவர்களின் தியாகம் வெளியில் தெரியாமல் இருக்கிறது. அவர்களை பற்றிய பாடங்கள் புத்தக்கங்களில் இடம்பெற வேண்டும்.

குழந்தைகளின் மனதில் விதைப்பது, நல்ல விதைகளாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. `இந்த ஆட்சிதான் காமராஜர் ஆட்சி’ என்று அண்ணன் இளங்கோவன் சொல்வது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனவே, கல்வியில் வழிகாட்டு முறை கொண்டு வரப்பட வேண்டும்’’ என்றார்.

Views: - 172

0

0