‘திமுக சின்னத்தை கொலுசு சின்னமாக மாற்றிக் கொள்ள வேண்டும்’: சி.பி.ராதாகிருஷ்ணன் விமர்சனம்..!!

Author: Rajesh
8 April 2022, 7:06 pm
Quick Share

கோவை: திமுகவை கொலுசு கட்சி என்றும் அவர்களது உதயசூரியன் சின்னத்திற்கு பதிலாக கொலுசு சின்னத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் முன்னாள் எம்.பி சிபி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் காந்தி பார்க் பகுதியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் எம்பி சிபி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

சொல்வதை செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்து விட்டு சொல்லாததை எல்லாம் செய்பவர்கள்தான் திமுகவினர். சொத்தையே விற்று கட்டுவது போல் சொத்து வரியை உயர்த்தி உள்ளனர்.

அதிமுகவினர் மத்திய அரசிடமிருந்து தேவையானவற்றை பெரும்பொழுது அடிமை அரசு என கூறிய இவர்கள் தற்போது அனைத்திற்கும் டெல்லியை பார்த்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். கையாளாகாத அரசு ஆட்சி பொறுப்பில் உள்ளதாகவும் கூறினார்.


காமராஜருக்கு சுவிட்ஸ் வங்கியில் கணக்கு உள்ளதாக கூறி வந்தவர்கள் தான் திமுகவினர். திமுக பெற்றுள்ள கடைசியில் வெற்றி இந்த வெற்றிதான். திமுக கட்சியின் பெயரை கொலுசு பார்ட்டி என்றும் அவர்களது உதயசூரியன் சின்னத்தை கொலுசு சின்னமாக மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

மத்திய அரசுதான் சொத்து வரியை உயர்த்தியதற்கு காரணம் என்று கூறினால் அதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகள் சொல்லாமலேயே பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது மத்திய அரசு தான். ஆனால் திமுக அரசு கூறியதை சரிவர செய்யவில்லை.வேதனையோடு பெட்ரோல் விலையை உயர்த்துகின்ற சூழ்நிலையில் மத்திய அரசு உள்ளதாது.

ரஷ்யாவிலிருந்து குருடாயில் இந்தியாவிற்கு வரும் பொழுது பெட்ரோல் விலை குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 785

0

0