பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வனத்துறை : பெண்களை இழுத்து தள்ளிய கொடுமை.. தவிக்கும் 15 குடும்பங்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2024, 7:59 pm
Dharma
Quick Share

பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வனத்துறை : பெண்களை இழுத்து தள்ளிய கொடுமை.. தவிக்கும் 15 குடும்பங்கள்!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் குடியிருக்கும் பூர்வகுடிகளை வனத்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்

பென்னாகரம் அருகே உள்ள ஏமனூர், சிங்காபுரம், ஒகேனக்கல், மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருக்கும், கால்நடை வளர்ப்போர், மீனவர்கள் உள்ளிட்டவர்களை வனத்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.

மேலும் படிக்க: நீதிக்கு அடையாளம்.. I.N.D.I.A கூட்டணியை பலப்படுத்திய கெஜ்ரிவால் விடுதலை : முதலமைச்சர் ஸ்டாலின் பூரிப்பு!

அந்த வகையில் இன்று ஒகேனக்கல் அருகே உள்ள, எடத்திட்டு, வேப்பமரத்து கோம்பு ஆகிய பகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர்.

கடந்த ஐந்து தலைமுறைகளாக குடியிருந்து வரும் அவர்கள், வனப்பகுதி நிலத்தில் குடியிருப்பதாக கூறி வனத்துறையினர் அடிக்கடி அவர்களை தொந்தரவு செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர், அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்களின் வீடுகளின் கூறைகளை பிரித்து, பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு, அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். வீட்டில் இருந்த பெண்களை வெளியே இழுத்து தள்ளி உள்ளனர்.

Views: - 167

0

0