‘லஞ்சம் இல்லாமல் காய் நகராது‘ : பல நாள் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ அதிரடி கைது!!

22 October 2020, 1:23 pm
Vao Arrest - Updatenews360
Quick Share

புதுக்கோட்டை : குடுமியான் மலை கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் பட்டா மாறுதலுக்காக ரூ 11 ஆயிரம் லஞ்சம் வாங்கி போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருபவர் மணிகண்டன். இவர் மணல்மேல் குடியிலிருந்து குடுமியான்மலைக்கு மாறுதலாகி இரண்டு மாதங்கள் தான் ஆகிறது.

ஆனால் மணிகண்டனிடம் அப்பகுதியில் எந்த ஒரு வேலைக்கு அணுகினாலும் லஞ்சம் வாங்குவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பணியாற்றுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இவரிடம் எந்த வேலையாக இருந்தாலும் லஞ்சம் தான் பேசுமாம், லஞ்சம் கொடுத்தால் உடனடியாக முடித்து தருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்

இந்நிலையில் பட்டா மாறுதலுக்காக துரையரசன் என்பவர் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டனை அணுகி உள்ளார். இதற்கு அவர் ரூ.11 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத துரையரசன் இது குறித்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை துரையரசனிடம் கொடுத்து அதனை விஏஓ விடம் கொடுக்குமாறு கூறியதையடுத்து துரையரசனும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறியது போல கிராம் நிர்வாக அலுவலர் மணிகண்டனிடம் கொடுத்துள்ளார்.

இந்த பணத்தை மணிகண்டன் வாங்கிய தனது பையிக்குள் வைக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

புதுக்கோட்டைக்கு பட்டா மாறுதலுக்காக ரூ 11 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Views: - 44

0

0