விபத்தில் சிக்கிய சகோதரர்கள் : இளைய மகன் இறந்ததை தாங்க முடியாத தாய் தூக்கிட்டு தற்கொலை.. கோவையில் சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2022, 8:23 pm
Cbe Gh- Updatenews360
Quick Share

கோவை : கோவையில் தனது மகன் சாலை விபத்தில் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாத தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கோவை சேரன்மாநகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவரது மனைவி லதா (41). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சகோதரர்கள் இருவரும் கடந்த 7ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது சாலை விபத்தில் சிக்கினர்.

தொடர்ந்து இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் லதாவின் இளைய மகன் கடந்த 16ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அறிந்த லதா கதறி அழுதார். மேலும், கடந்த 20ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், சிகிச்சை பலனின்றி லதா நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இளைய மகன் விபத்தில் இறந்த சோகத்தை தாங்காமல் தாய் தற்கொலை செய்து கொண்ட சமபவம் அக்கம் பக்கத்தினரியேடே மிகுந்த சோகத்தை உருவாக்கியுள்ளது.

Views: - 436

0

0