சட்டப்பேரவையில் திமுக வெளிநடப்பு : இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க முடிவு

23 February 2021, 12:57 pm
Dmk - updatenews360
Quick Share

சென்னை: தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க திமுக முடிவு செய்துள்ளது.

கடந்த 5ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்த நிலையில், கூட்டம் நிறைவடைந்தது. இந்நிலையில், 2021-2022ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

கடந்த இரண்டு முறை சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்றதுபோல், இந்த முறையும் அங்கேயே இடைக்கால பட்ஜெட் கூட்டம் தாக்கல் செய்யப்பட்டது.

11வது முறையாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக, எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகனுக்கு பேச வாய்ப்பு கேட்டு எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இந்த நிலையில், வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிக்க திமுக முடிவு செய்துள்ளோம்,” எனக் கூறினார்.

Views: - 0

0

0

Leave a Reply