15000ஐ நெருங்கும் செங்கல்பட்டு கொரோனா பாதிப்பு…! இன்று மட்டும் 360 பேருக்கு பாசிட்டிவ்

31 July 2020, 3:07 pm
coronavirus_tests_Updatenews360
Quick Share

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 360 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் இருக்கிறது. சென்னையை மிரட்டிய கொரோனா இப்போது காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, தேனி, நெல்லை என பல மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந் நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 360 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த பாதிப்பு 14,557 ஆக உயர்ந்து உள்ளது. 10,480 பேர் கொரோனாவில் இருந்து குணம் பெற்று விட்டனர்.

3,471 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். இது வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 246  பேர் பலியாகிவிட்டனர். நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

வீடு வீடாகச் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டும் வருகின்றனர். அரசின் நடவடிக்கை மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரி உள்ளனர்.

Leave a Reply