பயணியின் பையை சோதனை செய்த அதிகாரி ஷாக்… ரூ.15 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்… சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
24 April 2024, 9:41 am
Quick Share

தோகாவிலிருந்து ரூ.15 கோடி மதிப்புடைய ஒரு கிலோ கொக்கையன் போதை பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள், விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய் துறை தீவிரமாக கண்காணித்து கொண்டு இருந்தனர்.

மேலும் படிக்க: திமுக பெண் கவுன்சிலரின் 14 வயது மகள் கடத்தல்…? போலீசார் அலட்சியம்… மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்ணீர் மல்க புகார்..!!

அப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பாரத் வசித்தா (28) என்ற பயணி தோகாவிலிருந்து வந்து விட்டு உள்நாட்டு விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்காக, டிரான்சிட் பயணியாக விமான நிலையத்திற்குள் வந்தார்.

மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பெயரில் அவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது, அவர் வைத்திருந்த பைக்குள் சுமார் ஒரு கிலோ எடையுடைய போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் அந்த பயணியின் பயணத்தை ரத்து செய்து, தனி அறைக்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அப்போது, பயணி வைத்திருந்தது ஹெராயின் போதை பொருள் என்றும் முதலில் கூறப்பட்டது. ஆனால், அதிகாரிகள் அந்த போதை பொருட்களை பரிசோதித்த போது, அது மிகவும் விலை உயர்ந்த கொக்கையின் போதைப் பொருள் என்று தெரிய வந்தது. அதன் சர்வதேச் மதிப்பு சுமார் ரூ.15 கோடியில் இருந்து ரூ.25 கோடி வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் பயணியை கைது செய்து மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இளைஞர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. பின்னர் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

Views: - 84

0

0

Leave a Reply