தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை… ரூ.47 ஆயிரத்தை கடந்து விற்பனை… வரலாறு காணாத விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி…!!

Author: Babu Lakshmanan
2 December 2023, 10:34 am
Gold Rate - Updatenews360
Quick Share

தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை… ரூ.47 ஆயிரத்தை கடந்து விற்பனை… வரலாறு காணாத விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி…!!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்திலிருந்து நேற்று முன்தினம் வரை வரலாறு காணாத வகையில், சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்துள்ளது.

கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை, இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், கடந்த இரு தினங்களாக தங்கம் விலை குறைந்திருந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை மளமளவென உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ரூ.47,320க்கு விற்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,915-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம், கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,080 அதிகரித்துள்ளது.

சென்னையில் வெள்ளியின் விலை கிராம் 1 ரூபாய் அதிகரித்து 83.50 ரூபாய்க்கும், கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து ரூ.83,500-க்கு விற்பனை ஆகிறது.

.

Views: - 287

0

0