இதை விட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது… இன்றைய தங்கம் விலை நிலவரம் தெரியுமா..?

Author: Babu Lakshmanan
12 March 2024, 10:39 am
Quick Share

இதை விட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது… இன்றைய தங்கம் விலை நிலவரம் தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது.

மார்ச் மாத தொடங்கியதில் இருந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் ரூ.1,800 வரை தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 9ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்த நிலையில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் அதே விலையே நீடிக்கிறது.

அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.6,150க்கும், ஒரு சவரன் ரூ.49,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராம் ரூ.5,038க்கும், ஒரு சவரன் ரூ.40,304க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து கிராம் ரூ.79.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 618

0

0