வார இறுதியில் அடிச்சு தூக்கிய தங்கம் விலை… ஒரே நாளில் ரூ.240 அதிகரிப்பு ; அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

Author: Babu Lakshmanan
19 January 2024, 10:46 am
Quick Share

வார இறுதியில் அடிச்சு தூக்கிய தங்கம் விலை… ஒரே நாளில் ரூ.240 அதிகரிப்பு ; அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. ஆனால், 2024ம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை சரிந்து வருவது ஆபரண பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,810க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.4,759க்கும், சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.38,072க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.77.20க்கும், ஒரு கிலோ ரூ.77,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

.

Views: - 4110

0

0