ஜெட் வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை… ஒரே நாளில் ரூ.600 உயர்வு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
20 October 2023, 1:35 pm
Gold Rate - Updatenews360
Quick Share

ஜெட் வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை… ஒரே நாளில் ரூ.600 உயர்வு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,660 ஆகவும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,280  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.61 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,432 ஆகவும், சவரனுக்கு ரூ.488 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,456 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 860

0

0