“துன்பங்கள் நீங்கி இன்பம் பெருக வேண்டும்“ : தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி தீபாவளி வாழ்த்து!!

13 November 2020, 11:04 am
Cm Diwali - Updatenews360
Quick Share

தமிழகத்தில் நாளை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடும் அன்பிற்குரிய தமிழக மக்களக்கு தீபாவளி வாழ்த்துக்கள். அறத்தின் ஆட்சி, ஆணவத்தின் வீழ்ச்சியை குறிக்கின்ற நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

காரிருள் மறைந்து அறிவொளி பிறந்து, இன்பம், இனிமை நிறைந்த நன்னாள் ஆக தீபாவளி விளங்குகறிது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீபவாளி திருநாளில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது தீபாவளி வாழ்த்துக்கள் என முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 17

0

0