எதிர்க்கட்சி தலைவர் இருக்கை விவகாரம்.. ஆர்பி உதயகுமாருக்கு வழங்க சபாநாயகருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை!
Author: Udayachandran RadhaKrishnan13 February 2024, 2:14 pm
எதிர்க்கட்சி தலைவர் இருக்கை விவகாரம்.. ஆர்பி உதயகுமாருக்கு வழங்க சபாநாயகருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை!
ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணை எதிர்க்கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக தரப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அவரை துணை எதிர்க்கட்சி தலைவராக தமிழக சட்டமன்றத்தில் தொடர் அனுமதிக்க கூடாது எனவும். ஆர்.பி.உதயகுமாரை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக நியமிக்க வேண்டும் என அதிமுக தரப்பில் சபாநாயரிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது வரையில் தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரரத்தில் நடவடிக்கை எடுக்காததால் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் தான் தற்போதும் அமர்ந்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கருத்து தெரிவித்தார்
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் தரப்பில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அது குறித்து விரைவில் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
0
0