PERFECT-ஆ இருந்தால் CHOCOLATE : போக்குவரத்து காவலர்களின் அசத்தல் செயல்!!

19 January 2021, 2:41 pm
Chocolate For Perfect - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தலைக் கவசம் அணிந்தும் சீட் பெல்ட் அணிந்தும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சாக்லேட் வழங்கி வரவேற்று விழிப்புணர்வை செங்குன்றம் வட்டார போக்குவரத்து காவல்துறையினர் ஏற்படுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் சுங்க சாவடியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 32வது சாலை பாதுகாப்பு மாதத்தை யொட்டி செங்குன்றம் வட்டார போக்குவரத்து போலீஸார் மற்றும் சோழவரம் போக்குவரத்து காவல் துறையினர் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

மேலும் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தும், காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து வருவபவர்களுக்கு சாக்லேட் கொடுத்து விழிப்புணர்வு மேற்கொண்ட போக்குவரத்து காவல்துறையினரின் செயல் பாராட்டை பெற்று வருகிறது.

இதில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சரவணன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணகுமார் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டனர். இன்று துவங்கி வருகிற பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி வரை தொடர்ந்து வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபெறுகிறது.

Views: - 7

0

0