தூத்துக்குடி சிவன் கோவிலில் முதலமைச்சர் ஸ்டாலின் மகள் சுவாமி தரிசனம்… வைரலாகும் புகைப்படம்…!!

Author: Babu Lakshmanan
27 October 2022, 4:28 pm
Quick Share

தூத்துக்குடி சிவன் கோவிலுலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை ரகசிய சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழக முதலமைச்சர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் திராவிட கொள்கை கொண்டுள்ளார். இந்துக்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்வது கிடையாது. ஆனால், சமீப காலமாக தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் காரணமாக ஸ்டாலின் திமுக இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்ற கருத்தை அவ்வப்போது பரப்பி வருகிறார்.

CM Stalin - Updatenews360

திமுக பொருத்தவரை கருணாநிதியும், அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கோவில்களுக்கு செல்வது கிடையாது. கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கோவிலுக்கு சென்றாலும், அது ரகசியமாக வைக்கப்படும். ஆனால் அவ்வப்போது திமுக இந்துக்களுக்கு எதிரான இயக்கம் அல்ல என்ற வகையில், தற்போது சில புகைப்படங்களும், சில கருத்துக்களும் திமுகவாலே மறைமுகமாக வெளியிடப்பட்டு வருகின்றன.

durga stalin - updatenews360

இந்து சமய அறநிலையத்துறை மூலம் தமிழக கோவில்களில் பல திருப்பணிகள் நடைபெறுவதும் மிகவும் பிரபலமாகப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் சிவன் கோவில் சங்கர ராமேஸ்வரர் கோவிலுக்கு காலை முதலமைச்சர் ஸ்டாலின் மகள் செந்தாமரை சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தார்.

stalin daughter - updatenews360

கோவிலில் சுவாமியை வழிபட்ட பின்னர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் சில மணி நேரம் சுவாமி தரிசனம் செய்தார். மேலும், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் சிவன் கோயிலை அடுத்து அமைந்துள்ள ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

stalin daughter - updatenews360

முதல்வர் மகள் கோவிலுக்கு வருவது ரகசியமாக வைக்கப்பட்டது. அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. செந்தாமரை சுவாமி தரிசனம் செய்வதை யாரும் புகைப்படம், வீடியோ எடுக்காதவாறு உரிய பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

Views: - 387

0

0