மீண்டும் பரபரப்பை கிளப்பிய கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு : 60 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் முகாம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2023, 10:30 am
Cbe NIA - Updatenews360
Quick Share

கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் ஒன்று வெடி விபத்துக்குள்ளானது. இது வெறும் விபத்தல்ல இது சதித்திட்டத்தின் பின்னணி என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்தன.

கார் குண்டு வெடிப்புக்கு உள்ளானதில் ஜமீசா முபின் என்ற வாலிபர் பலியானார். ஜமேசா முபீனின் பின்னணி மற்றும் அவர்களின் சகாக்கள் உள்ளிட்டவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்திய பொழுது முகமது தல்கா , முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்டோன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

சம்பவம் நடந்த நான்கு நாட்களில் இந்த வழக்கு சென்னை என்ஐஏ அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டன. வழக்கை கையில் எடுத்த என் ஐ ஏ அதிகாரிகள் தமிழ்நாடு போலீசாரிடமிருந்து பெறப்பட்ட கோப்புகளின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினர்.

விசாரணையின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் கோவை வந்த என் ஐ ஏ அதிகாரிகள் ஜமீஷா முபீனின் மனைவி மற்றும் முன்னாள் கைதான நபர்களிடம் வாக்குமூலம் பெற்று ஆவணப்படுத்தி இருக்கின்றனர்.

அதன் அடிப்படையில் இன்று காலை சென்னை நெல்லை கோவை உள்ளிட்ட 60 இடங்களில் தேசிய முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றனர்.

கோயம்புத்தூரை பொறுத்தவரையில் உக்கடம் குனியமுத்தூர் ஆத்துப்பாலம் கரும்புக்கடை ஜி எம் நகர் வசந்தம் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதிவைக்கும் மேற்பட்ட வீடுகளில் என் ஐ ஏ அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

முன்னதாக கிடைக்கப் பெற்ற தடயங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் நடந்து வரும் இந்த ரெயிடில் அடுத்த கட்டமாக யார் கைதாக போகின்றனர் ? என்ன கைப்பற்ற போகின்றது ? என்பது பின்னர் தெரியவரும்.

சிறிய கால இடைவெளியில் மீண்டும் தேசிய முகமை அதிகாரிகளின் இந்த ரெய்டு பெறும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

Views: - 299

0

0