டெண்டர் குறித்து புகார்கள் வந்தால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை… சங்க நிர்வாகிகளுக்கு கோவை ஒப்பந்ததாரர் நலச்சங்கம் எச்சரிக்கை…!!

Author: Babu Lakshmanan
3 February 2024, 2:34 pm
Quick Share

டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சங்க நிர்வாகிகளுக்கு கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

KCP Infra Limited நிறுவனத்தின் தலைவரும், கோவை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் செயலாளருமான K.ChandraPrakash வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது;- சமீப காலமாக ஏலம் எடுப்பதற்கான தகுதி இல்லாதவர்கள் டெண்டர் எடுப்பதாக அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. நேற்று தொடங்கிய நிறுவனங்கள் கூட ரூ.200 கோடிக்கு வேலை செய்வதாக புகார்களாக வருகின்றன.

அனைத்தையும் பொதுவெளியில் கொண்டு வரவேண்டாம் என்று நினைக்கிறோம். குறிப்பாக, செம்மொழி பூங்கா டெண்டரில் தகுதியில்லாத ஒப்பந்ததாரர்கள் பங்கெடுத்து இருப்பதாக சொல்லுகிறார்கள். அவர்கள் எப்படி பில் வாங்குவார்கள் என்று தெரியவில்லை. நமது சங்க உறுப்பினர்கள் தயவு செய்து, ஏலம் எடுப்பதற்கான தகுதி இருக்கிறதா..? என்று முதலில் பார்க்க வேண்டும்.

அதிகாரிகள் யாரும் இதனை கவனிப்பதில்லை. நாளை இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் சிக்கினால், உங்களின் குடும்ப நிலையை யோசித்து பாருங்கள். நெடுஞ்சாலை துறையில் தகுதியில்லாதவர்களுக்கு டெண்டர் வழங்கப்படுகிறது. நமது சங்க உறுப்பினர்கள் டெண்டர் போட்டாலும் மிரட்டி வாபஸ் வாங்க வைக்கிறார்கள்.

ஆன்லைன் டெண்டரில் ஆன்லைனில் ஆவணங்கள் சமர்பிக்கவில்லை என்று கூறி டெண்டரை நிராகரிக்கிறார்கள். இதனை கண்டிப்பாக நமது சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்.

அப்படி வழக்கு போடும் போதும், நமது சங்கத்தைச் சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் ஏதேனும் தவறு செய்வதாக புகார் எழுந்தால் நமது சங்கம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். தகுதியில்லாமல் டெண்டரை போட்டு விட்டு சங்கம் எடுத்துச் செல்லக்கூடாது என்பதோ, மிஷினரி, அனுபவ சான்றிதழ் முறையாக இல்லாமல் உதவி செய்யுமாறு கூறவோ கூடாது.

முன்பைப் போல, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சிகளில் ஆவணங்கள் குறித்த உண்மை தன்மையை ஆராய்வது கிடையாது. அதற்கு பதிலாக, சைட்டை அதிகாரிகளுடன் சென்று பார்க்க வேண்டும் என்று புதிய நடைமுறை கொண்டு வந்து இருக்கிறார்கள். இப்பொழுது, சைட்டை நாமாகவே டிசைன் செய்து கொள்ளும் EPC என்ற முறையில் இந்தியாவே செயல்பட்டு வருகிறது. ஆனால், பொதுப் பணித்துறை, சென்னை, கோவை மாநகராட்சிகள், CMDA ஆகியவை சைட்டை பார்க்கவில்லை எனில் டெண்டரை ரத்து செய்து விடுவார்கள் என்று சொல்கிறார்கள். எனது டெண்டரை ஒரு முறை ரத்து செய்துள்ளார். நிச்சயமாக நேரம் பார்த்து நீதிமன்றத்திற்கு செல்வேன். அப்போது, அதிகாரிகள் சிக்குவார்கள். எனவே, ஒப்பந்ததாரர்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.

வெளிப்படையாக சொல்லப் போனால் செம்மொழி பூங்கா டெண்டரில் ஒரு ஒப்பந்ததாரர் பணம் வாங்க முடியாது. அதேபோல, சாலைப் பணிகளில் உங்களால் என்ன முடியுமோ..? அதை மட்டும் பண்ணுங்க.. புகார்கள் வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறியுள்ளார்.

Views: - 488

0

0