வங்கி ஏ.டி.எம்.களை குறி வைத்த மர்ம நபர்கள்… கோவை மாநகர மையப் பகுதியில் துணீகரம் ; சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை…!!

Author: Babu Lakshmanan
24 November 2023, 12:39 pm
Quick Share

கோவை மாநகர மையப் பகுதியில் வங்கி ஏ.டி.எம்.களை குறி வைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

கோவையில் மத்திய பகுதியில் அமைந்து உள்ளது மாவட்ட நிர்வாகம் அலுவலகமான கலெக்டர் அலுவலகம். மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம், நீதிமன்றம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பிற தலைமை அலுவலகங்கள் நிறைந்த பகுதியாக கோபாலபுரம் பகுதி உள்ளது.

இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள், உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்கின்ற ரயில் பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதுமட்டு மல்லாமல் மாவட்டத்தின் நிர்வாக அலுவலகமான ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வந்து செல்கின்றனர்.

இதேபோன்று மாநகர ஆணையர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் நீதிமன்றங்களுக்கு செல்லும் அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்லும் மாநகரின் மையப் பகுதியாக உள்ளது. இந்தியன் வங்கி ஏ.டி.எம், சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம் இத்தனை பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பகுதியில் உள்ளது.

நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் அந்த ஏ.டி.எம் கதவுகளை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்து உள்ளனர். இந்நிலையில் இன்று அந்த வங்கியின் அதிகாரிகள் ஏ.டி.எம் இயந்திரத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், அதில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் நடைபெற்ற கொள்ளை முயற்சியால் அதிகாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Eps அரசியல் நாகரீகமே இல்லையா? அதிகார மமதையில் அராஜகம் : கேபி முனுசாமியை தடுத்த திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்!
  • Views: - 278

    0

    0