கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரம் : மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு மனு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 October 2023, 4:16 pm
Velalore- Updatenews360
Quick Share

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரம் : மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு மனு!!

கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு உள்ளது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால், நிலத்தடி நீர், காற்று மற்றும் மண் மாசுபாடு அடைவதாகக் கூறி, சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீண்ட காலமாக நடைபெற்று வரும் நிலையில், குப்பைகளை அழிப்பது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், அந்த நடவடிக்கையை கோவை மாநகராட்சி சுணக்கம் காட்டி வந்துள்ளது.

இந்த நிலையில் குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு சார்பாக கோவை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், கடந்த 16/10/23 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம்‌ தெற்கு மண்டலத்தில்‌ வெள்ளலூர்‌ குப்பை கிடங்கு சம்பந்தமாக விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணை முடிவில்‌ கோவை மாநகராட்சிக்கு எதிராக பல
கருத்துக்களை தெரிவித்தனர்‌. மேலும்‌ அடுத்த விசாரணைக்கு முன்னர்‌
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்‌ சார்பாக குப்பை கிடங்கை ஆய்வு செய்து ஆய்வறிக்கை தாக்கல்‌ செய்ய உத்தரவிட்டுள்ளனர்‌.

இதனால் தங்களது வாரியம்‌ குப்பை கிடங்கு எப்படி செயல்‌படுகிறது மற்றும்‌ திடக்கழிவு 2016 சட்டத்தின்படி மாநகராட்சி செயல்படுகிறதா? முக்கியமாக கடந்த இருபது வருடங்களாக போத்தனூர்‌, வெள்ளலூர்‌ பகுதியல் வசிக்கும்‌ இலட்சக்கணக்கான மக்கள்‌ இந்த வெள்ளலூர்‌ குப்பை கிடங்கால்‌ ஏற்படும்‌ துன்பங்களை பதிவு செய்து வெள்ளலூர் குப்பைக்கிடங்கில்‌ 30/8/2018 ல்‌ வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் படி வெள்ளலூர்‌ குப்பைக் கிடங்கில்‌ இனிமேலும்‌ புதிதாக குப்பைகள்‌ கொட்ட கூடாது என்றும்‌ மாநகரத்தில்‌ உள்ள ஐந்து மண்டலங்களில்‌ அங்கேயே குப்பைகள்‌ கொட்ட தாங்கள்‌ பரிந்துரை செய்து (இப்போதும்‌ கூட எங்கள்‌ பகுதியில்‌ கடுமையான துர்நாற்றம்‌ வீசுகிறது) எங்களது பகுதியை மீட்டெடுத்து பொதுமக்களை நிம்மதியாக வாழ வகை செய்யவேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

Views: - 216

0

0