மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கு : மூச்சுக்காற்று கொடுத்து உயிரை காப்பாற்றிய இளைஞர் ; குவியும் பாராட்டு..!!

Author: Babu Lakshmanan
25 October 2023, 3:42 pm
Quick Share

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்குக்கு வாய் வைத்து மூச்சுக்காற்று கொடுத்து உயிரை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு கோட்டைச்சேரி பகுதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன. அப்பொழுது எதிர்பாராத விதமாக ஒரு குரங்கு மின் வயரில் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட நிலையில், குரங்கு கீழே விழுந்து உயிருக்கு போராடி மயக்கம் அடைந்தது.

இதனையடுத்து இதை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்யும் நிதிஷ் என்ற வாலிபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குரங்கிற்கு வாய் வைத்து மூச்சுக்காற்று கொடுத்து கடுமையாக போராடி குரங்கை காப்பாற்றினார்.

உயிர்பிழைத்த குரங்கு அங்கிருந்து சென்றது. மூச்சுக்காற்று கொடுத்து குரங்கின் உயிரை காப்பாற்றிய இளைஞர் நிதிஷை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Views: - 379

0

0