மூட்டை மூட்டையாக பணத்தை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் : சிக்கிய பிரபல தொழிலதிபர்..அதிர வைத்த பின்னணி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 April 2022, 4:16 pm
Money Seized -Updatenewsw360
Quick Share

திருப்பூர் : தொழிலதிபர் வீட்டில் கணக்கில் காட்டப்படாத பண மூட்டைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கட்டிட தொழிலாளர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் குள்ளேகவுண்டம்பாளையத்தை சேர்ந்த துரைசாமி என்பவர் தனது பழைய வீட்டில் உள்ள ஒரு அறையில் மூட்டை மூட்டையாக பணத்தை கட்டி வைத்திருந்துள்ளார்.

அங்கு கட்டிட வேலைக்கு சென்ற நபர்கள் இதனை அறிந்து 3 முறை மூட்டையில் கட்டி 2 கோடி வரை கொள்ளை அடித்துள்ளனர். எவ்வளவு கொள்ளை போனது என தெரியாததால் துரைசாமி 1.50 லட்சம் பணம், 2 1/2 சவரன் நகை காணாமல் போனதாக மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் கொள்ளையடித்த பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்திய கட்டிட தொழிலாளர்கள் சதீஷ் (வயது 29), சக்தி (வயது 24), தாமோதரன் (வயது 33), ராதாகிருஷ்ணன் (வயது 53) என்ற நால்வரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 30 சவரன் நகை 16 லட்சம் ரூபாய் பணம், இரண்டு பைக், இரண்டு கார், நான்கு வீட்டு பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Views: - 1139

0

0