வெளிநாட்டில் வேலை செய்பவரின் வீட்டில் 70 சவரன் கொள்ளை… மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!

Author: Babu Lakshmanan
27 April 2022, 4:42 pm
Quick Share

திருச்சி : திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் மற்றும் வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை காவேரி நகரை சோ்ந்தவா் பஞ்சவர்ணம் (55). இவருடைய கணவா் துபாயில் வேலை செய்து வருகிறார். இவா்களுக்கு 2 மகள்கள். சென்னையில் வசித்து வரும் மூத்த மகளை பார்ப்பதற்காக கடந்த 3ஆம் தேதி அவரும், இளைய மகளும் சென்னைக்கு சென்றார். இதில் கடந்த 15ம் தேதி இளைய மகள் பெட்டவாய்த்தலையில் உள்ள வீட்டிற்கு வந்துவிட்டு 17ம் தேதி மீண்டும் சென்னை திரும்பி உள்ளார்.

இந்நிலையில் பஞ்சவா்ணத்தின் உறவினரான நடராஜன் என்பவா் கோழிகளுக்கு தீவனம் வைப்பதற்காக வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பெட்டவாய்த்தலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு .வந்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கொள்ளையில் ஈடுபட்ட 4 நபர்களுடைய கைரேகைகள் பதிவாகி உள்ளதை கைரேகை கண்டனர். மேலும், மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்தக் கொள்ளையில் வீட்டில் இருந்த மொத்தம் 70.5 சவரன் தங்க நகைகள் , 1.5கிலோ வெள்ளி, பட்டு புடவைகள் 7, தங்க வாட்ச் 1, பணம் 2லட்சது்து 20ஆயிரம், என மொத்தம் 13 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

Views: - 796

0

0