முதியோர் இல்லத்தில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்… நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம்..!!

Author: Babu Lakshmanan
2 October 2023, 6:03 pm

கோவையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவையில் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் போத்தனூரில் அமைந்துள்ள ST JOSEPH முதியோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.

காலை 8 மணியளவில் முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பின்னர், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • After listening to the story, Simbu spat out கதையை கேட்டதும் காரித் துப்பிய சிம்பு… சங்கடத்தில் இயக்குநர்!!