கொரோனா முன்னெச்சரிக்கை : கொடைக்கானலில் நேற்று திறக்கப்பட்ட பூங்காக்கள் மறு உத்தரவு வரும் வரை மூட உத்தரவு!!

6 July 2021, 6:46 pm
Kodai Park Closed - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில் நேற்று திறக்கப்பட்ட மூன்று பூங்கா தோட்டங்கள் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாதளங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சுமார் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பூங்காங்களுக்கு வருகை தந்தனர்.

கொடைக்கானல் பொறுத்தவரை பிரயண்ட் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் செட்டியார் பூங்காங்கக்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று திறக்கபட்ட பிரயண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா மற்றும் ரோஜா பூங்காங்களை மறு உத்தரவு வரும் வரை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக கோட்டாட்சியர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்ட நிலையில் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என தெரிவித்துள்ளனர். அதே நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டடுள்ளது.

Views: - 139

0

0