தமிழக கேரள எல்லையில் கொரோனா தடுப்பு பணி : குமுளியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2021, 11:46 am
Minister Subramaniam- Updatenews360
Quick Share

தேனி : தமிழக கேரள எல்லையான குமுளி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் தமிழக கேரள எல்லைப் பகுதியான குமுளியில் இன்று கொரானா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார் .

தேனி மாவட்டம் குமுளி சோதனை சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள கொரானா தடுப்பூசி முகாம் அரங்கினை அதிகாரிகளுடன் பார்வையிட்டு கொரானா தடுப்புசி செலுத்தும் நபர்களிடம் கேட்டறிந்தார்.

குமுளியில் உள்ள தமிழக அரசு பணிமனையை பார்வையிட்டு குமுளி பேருந்து நிருதத்தில் உள்ள குறைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் கேட்டறிந்தார் .

மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாவட்ட செயலாளர்கள் உள்பட அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 431

0

0