தீபாவளியை கொண்டாட முண்டியடித்த மக்கள் : சொந்த ஊருக்கு செல்ல ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!!
Author: kavin kumar3 November 2021, 6:09 pm
கோவை: நாளை தீபாவளியொட்டி கோவை ரயில் நிலையத்தில் சொந்த ஊர் செல்ல பிற மாவட்ட மற்றும் மாநில பயணம் செல்ல மக்களின் கூட்டம் அலைமோதியது.
தொழில் நகரமான கோவையில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தீபாவளியொட்டி தங்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம்.மேலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ரயில் நிலையத்தில் போலீசார் பயணிகளை முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றியும் இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுரை வழங்கினர். ரயில் நிலையத்தில் பிற மாவட்ட மற்றும் மாநில மக்களின் கூட்டம் அலை மோதியது. தீபாவளியையொட்டி சிறப்பு ரயில்கலும் இயக்கப்பட்டு வருகிறது.
இது நாள் வரை முன்பதிவு செய்யப்பட்ட ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டது. இதனால் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த 1 ந் தேதி முதல் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளதாள் பயணிகள் இருக்கையில் அமர்வதற்கு முண்டியடித்து ரெயிலில் ஏறி வருகின்றனர்.அவர்களை ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பா செல்ல அறிவுரை வழங்கினர்.இந்த கூட்டத்தை பயன்படுத்தி ரெயிலில் பட்டாசுகளை எடுத்துச் செல்பவர்களை கண்காணிக்க பயணிகளின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது.மேலும் அனைத்து நடை மேடைகளிலும் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்யப்பட்டது.
0
0