அதிமுகவுக்கு ரூ.5 கோடி நன்கொடை வழங்கிய சிஎஸ்கே நிர்வாகம்… தேர்தல் பத்திரத்தில் வெளியான புதிய தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2024, 5:52 pm
vsk
Quick Share

அதிமுகவுக்கு ரூ.5 கோடி நன்கொடை வழங்கிய சிஎஸ்கே நிர்வாகம்… தேர்தல் பத்திரத்தில் வெளியான புதிய தகவல்!!

இந்தியாவில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசில் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் முறை நடைமுறையில் இருந்தது. குறிப்பிட்ட கட்சிகளுக்கு நன்கொடை வழங்க நினைப்போர் எஸ்பிஐ வங்கியில் தேர்தல் பத்திரங்கள் வாங்கி, அதன்மூலம் நன்கொடையை வழங்கலாம்.

இதில் நன்கொடை வழங்கியவர்களின் பெயர் விபரம் வெளியே தெரியாது. இந்நிலையில் தான் தேர்தல் பத்திரம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திரம் செல்லாது. இனி தேர்தல் பத்திரம் வழங்க்கூடாது என உத்தரவிட்டது.

அதுமட்டுமின்றி 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் 2024 பிப்ரவரி மாதம் 15ம் தேதி வரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விபரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஏப்ரல் 6ம் தேதிக்குள் வழங்க உத்தரவிட்டதோடு, அதனை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தது. ஆனால் எஸ்பிஐ காலஅவகாசம் கோரியது.

அதற்கு உச்சநீதிமன்றம் மறுத்தது. இதையடுத்து கடந்த 12ம் தேதி எஸ்பிஐ சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விபரம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 13ம் தேதி உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் தேர்தல் பத்திரம் தொடர்பான விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி 2019 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 11 வரை மொத்தம் 3,346 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதில் 1,609 பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன. 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் நடப்பு ஆண்டு பிப்ரவரி 15 வரை மொத்தம் 18,871 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டன. இதில் 20,421 தேர்தல் பத்திரங்கள் பணமாக்க்பபட்டதாக கூறி அதன் விபரங்களை சீலிட்ட கவரில் வழங்கி இருந்தது.

இதையடுத்து கடந்த 14ம் தேதி எஸ்பிஐ அளித்த விபரங்களை இணையதளத்தில் வெளியிட்டது. இதில் நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் நன்கொடை பெற்ற கட்சிகளின் விபரங்கள் தனித்தனியே உள்ளது. தேர்தல் பத்திரத்தின் எண் இல்லாத நிலையில் எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை வழங்கியது என்பது புரியாத புதிராக உள்ளது. இதையடுத்து உச்சநீதிமன்றம் எஸ்பிஐயின் செயலை கண்டித்தது. மேலும் நாளைக்குள் அதுபற்றி விளக்கம் அளிக்க எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே தான் எஸ்பிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள தரவுகளின் விபரம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த தரவுகள் தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த கட்சிகளுக்கு யாரிடம் இருந்து தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ள விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி அதிமுகவுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் ரூ.5 கோடி நன்கொடை வழங்கி உள்ள விபரம் வெளியாகி உள்ளது.

Views: - 85

0

0